புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாச்சார அலுவல்கள் திணைக்களம் , இலங்கை கலைக்கழகம், மட்டக்களப்பு மாவட்ட செயலகம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மட்டக்களப்பு மாவட்ட இளம் எழுத்தாளர்களுக்கான இலக்கிய அமர்வு நேற்று முன்தினம் (26) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மற்றும் உதவி மாவட்ட செயலாளரின் ஆலோசனையின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இலக்கிய துறையில் எழுத்தாளர்களின் பங்குபற்றுதல்களையும் , தேசிய ரீதியில் அவர்களின் எழுத்தாற்றல்களையும் ஊக்குவிப்பதற்குமான செயலமர்வு இலங்கை கலைக்கழகத்தின் அனுசரணையுடன் இடம் பெற்றது .
பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவரும், பேராசிரியருமான ஸ்ரீ பிரசாந்தன் வளவாளராக கலந்து கொண்டார்.
அதேசமயம் இலங்கை கலைக்கழக உறுப்பினரும் , கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அரச இலக்கிய ஆலோசனை குழு உப செயலாளர் இணேஷ் , மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் M.A.C.ஜெயினாலாப்தீன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர்கள் மற்றும் 14 பிரதேச செயலகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளம் எழுத்தாளர்கள் செயலமர்வில் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடதக்கது.