விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர என்ன கோமா நிலையிலா உள்ளார் இவ்வாறு தெரிவித்துள்ளது மட்டக்களப்பு கமக்காரர்கள் அமைப்பு சம்மேளனம்.
நேற்றையதினம் (21) மட்டக்களப்பு மாவட்ட ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அதிகாரசபையின் முக்கிய உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
கமக்கார அதிகாரசபையின் உபசெயலாளர் நிரஞ்சன்,மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் அங்கத்தவர் பிரகாஷ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அதிகாரசபையின் தலைவர் ரமேஷ் ஆகியோர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இது குறித்து தெரிவிக்கையில் நேற்று முன்தினம் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தற்பொழுது 125 ரூபாவுக்கு நாடுமுழுவதும் அரிசி இலகுவாக கிடைக்கின்றது என்று தெரிவித்திருந்தார். ஆனால் மட்டக்களப்பு நகர்புறத்தில் உள்ள கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியில் தற்பொழுது கிடைக்கப்பெறும் அரிசி 200 அதிகமாகவே விற்கப்படுகிறது. அரசாங்கம் ஒன்று சொல்கிறது ஆனால் நடப்பதோ வேறு ஒரு விவசாயத்துறை அமைச்சருக்கு நாட்டில் எவ்வளவு விலைக்கு அரிசி விற்கப்படுகின்றது என்று தெரியாது என்றால் அவர் என்ன கோமா நிலையிலா நாட்டில் உள்ளார் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதேசமயம் இது தொடர்பில் விளக்கமாக தெரிவித்ததாவது.