Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரச்சாரங்களில் பொதுமக்களுக்கு விருந்துகள் வழங்குவது குற்றமாகும்; தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு!

பிரச்சாரங்களில் பொதுமக்களுக்கு விருந்துகள் வழங்குவது குற்றமாகும்; தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள்

‘‘ஜனாதிபதி வேட்பாளர்களால் உணவு, பானங்கள் அல்லது சிற்றுண்டிகளை பொது மக்களுக்கு விருந்துகளை வழங்குதல் ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும்’’ என மேலதிக தேர்தல் ஆணையாளர் (சட்டம் மற்றும் விசாரணை) பி.பீ.சி.குலரத்ன தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரால் அப்பகுதியைச் சேர்ந்த தொழில்வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களுக்காக நடத்தப்படவிருந்த விருந்துபசாரமொன்றை தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதையடுத்து புதிய பொது விவாதம் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்கள் மக்களுக்கு உணவு விருந்துபசாரங்களை வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் (சட்டம் மற்றும் விசாரணை) பி.பீ.சி.குலரத்ன தெரிவித்தார்.

கடந்த காலங்களில் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு விருந்துகளை நடத்தியுள்ளனர். இருப்பினும், அந்த நேரத்தில் இந்த விடயம் பெரிதாகக் கவனத்திற் கொள்ளப்படாத நிலையில், இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் கவனம் செலுத்தப்படுகிறது.

அப்படி நடத்துவது ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் ஆதரவாளர்களுக்குத் தூண்டுதலாக அமையும் என்றும் அதனைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மேற்கொள்ளக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

வேட்பாளர்கள் உணவு, பானம், குளிர்பானங்கள் அல்லது பரிசுகளை வழங்குவது ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் சட்டத்தின் 77ஆவது பிரிவின்படி குற்றமாகும் என்றார்.

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் மத்தியில் பிரசாரங்கள் மரதன் போட்டிபோலுள்ளது. கூட்டங்கள், வேட்பாளர் விவாதங்கள், ஊடக நேர்காணல்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் பிரசார நடவடிக்கைகளைத் தொடர்கின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்
அரசியல்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்

September 16, 2026
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!
உலக செய்திகள்

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

September 16, 2026
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!

September 16, 2026
சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது
செய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
Next Post
அனுரவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

அனுரவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு