ஜனாதிபதி தேர்தல் என்பது இந்த நாட்டின் வரலாற்றில் குறிப்பாக 70 ஆண்டுகளின் பின்பு இந்த நாட்டின் ஒரு யுக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு தேர்தலாக இந்த தேர்தல் மாறி கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் கொடுங்கோல் ஆட்சி ஒன்று நாட்டில் இளைஞர்களால் அகற்றப்பட்டு குறிப்பாக 2022 ஆம் ஆண்டு அரகலய என்ற போராட்டத்தின் மூலமாக இந்த நாட்டில் சிஸ்டம் சென்ஜ் தேவை என்று உணரப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் நாட்டில் இருந்த கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும் என்றொரு மக்கள் அபிமானம் இந்த நாட்டில் உருவாகி இருக்கின்றது என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
பொத்துவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய அவர், அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், குறிப்பாக தலைவர்களுக்காக மக்கள் என்ற சித்தாந்தம் மாற்றப்பட்டு மக்களுக்காக தலைவர்கள் என்கின்ற சித்தாந்தங்களும் கோட்பாடுகளும் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை சஜித் பிரேமதாசாவின் மேடையில் பேசப்பட்டு வருகின்றது. ஏனென்றால் எமது வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுடைய தந்தை ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது நாட்டில் வறுமைக் கோட்டில் வாழ்கின்ற மக்களுக்காகவும் இளைஞர்களுக்காகவும் யுவதிகளுக்காகவும் செயல்பட்ட ஒரு ஆட்சியை செய்தார்.
தாய்மார்களுக்கு தெரியும் வாழ்க்கையில் இருகின்ற செலவை குறைப்பதற்காக சணசவிய என்ற வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார். அதில் எங்களுடைய இளைஞர் யுவதிகளின் 30,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.
சணசவிய ஊடாக ஆசிரியர் நியமனம் வழங்கி இருந்தார்.அதேபோன்று நாட்டின் பல பாகங்களில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதற்காக காமெண்ட் என்கின்ற ஆடை தொழிற்சாலை நிறுவி வேலை வாய்ப்பு வழங்கி அந்த புரட்சியை அவரின் தந்தை நிறுவியிருந்தார். அவருடைய அரசியலுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது. அன்று ஜே.வி.பியின் வன்முறை யுத்தம் ஒன்று நடைபெற்ற பொழுது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் இந்த நாட்டினுடைய வீர தளபதியாக இருந்தபோது அவருடைய வாக்கு வாங்கி 3 லட்சத்திற்கு அதிகமாக இருந்த பொழுது. முஸ்லிம் காங்கிரஸ் உடைய தலைமை இல்லாத போது அந்த ஜனாதிபதி தேர்தலில் வெல்ல முடியாது என்ற நிலைமை இருந்தது. மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இந்த நாட்டில் மாபெரும் அரசியல் மாற்றத்தை செய்து. அன்று நமது நாட்டின் ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாசாவினை மாற்றினார்.
இன்று நாடாளுமன்றத்தில் இருக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஆடம்பர பங்களாக்களில் சொகுசு வாகனங்களில் இருந்து கொண்டு அரசியல் செய்கின்றார்கள். எங்களுடைய வாழ்க்கையை பத்தி பேசுகின்றார்கள் இல்லை. எங்களுடைய கஷ்டங்களை பத்தி பேசுகின்றார்கள் இல்லை. என்று சொல்லுகின்ற இளைஞர்களின் வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பதற்கு இந்த நாட்டின் எதிர்கால ஜனாதிபதியாக சஜித் பிரேமதாசா இருக்கின்றார். இந்த நாட்டில் இருந்து ஊழலை ஒழிக்க வேண்டும், அரசியல்வாதிகளுக்கு கொடுக்கின்ற பார் லைசன் நிறுத்த வேண்டும், என்பதற்காக இன்று களம் இறங்கி இருக்கின்றார் எங்களுடைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித். – என்றார்.