Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரியநேந்திரனுக்கு ஆதரவு கொடுக்க தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் குழு தீர்மானம்!

அரியநேந்திரனுக்கு ஆதரவு கொடுக்க தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் குழு தீர்மானம்!

2 years ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில், ஜனாதிபதி தேர்தல் 2024 இல் தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவது என தமிழரசுக் கட்சியில் தீர்மானம் எடுக்ப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் குழுவில் இவ்வாறு தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து சங்கு சினத்தில் வாக்களிப்பதென ஏகமனதாக தீர்மானத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று (29) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை அலுவலகத்தில் திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதன்போது ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பில் நீண்ட விவாதம் இடம்பெற்றிருந்தது. கலந்துரையாடலிலன் இறுதியில் ஒருமித்த முடிவாக தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பது என்ற முடிவினை எடுத்துள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை முடிவினை அறிவிக்காதுள்ள நிலையில், தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தரப்பினர் வேட்பாளர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்னர் அவற்றை பரிசீலித்து முடிவினை அறிவிக்கலாம் என தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட தரப்பினர் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு வெளிப்படையாகவே ஆதரவினையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருக்கோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி மட்டத்தில் தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பது என ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
மட்டு கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் கராத்தே போட்டியில் சாதனை!

மட்டு கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் கராத்தே போட்டியில் சாதனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு