Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரணிலுக்கு வாக்களித்தால் கேஸ் சிலிண்டர் உங்கள் வீடுதேடி வரும்; உறுதிபடக் கூறுகிறார் வடிவேல் சுரேஷ்!

ரணிலுக்கு வாக்களித்தால் கேஸ் சிலிண்டர் உங்கள் வீடுதேடி வரும்; உறுதிபடக் கூறுகிறார் வடிவேல் சுரேஷ்!

2 years ago
in செய்திகள்

அனுபவமுள்ள நாட்டை முன்னெடுத்து செல்லக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கொழுப்பில் நேற்று(28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

“இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ஒரு அனுபவசாளி ஒருவருக்கு மாத்திரம் இந்த நாட்டை வழிநடத்தி செல்ல வழியினை ஏற்படுத்தி கொடுத்தால் மாத்திரமே இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் சிங்களம் முஸ்லிம் ஆகிய மக்களுக்கு நல்லதாக அமையும்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற 39 பேரில் புதிதாக ஒருவருக்கு இந்த நாட்டை ஒப்படைத்தால் நாட்டை வழிநடத்தி செல்ல முடியாது. புதிதாக ஒருவர் நாட்டை பொறுப்பேற்றால் பயிற்சியினை மேற்கொள்ள மாத்திரம் தான் முடியும்.

அவர்கள் பயிற்சினை முடித்து நாட்டை வழமைக்கு கொண்டு வருவதற்கு முன்பு இந்த நாட்டைவிட்டு எமது உயிர்கள் பிரிந்து விடும். பயிற்சிபெறுவதற்கு இங்கு அனுமதி வழங்க நேரகாலங்கள் போதாது ஆகவே அனுபவம் வாய்ந்தவர்களிடம் இந்த நாட்டை மக்கள் கையளித்தால் சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்ல கூடியதாக அமையும்.

மக்கள் சரியான முறையில் கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்தால் கேஷ்சிலிண்டர் நமது வீடுகளை தேடி வரும் இல்லாவிட்டால் மக்களாகிய நாம் கேஸ் சிலிண்டர்களை தேடி வீதிக்கு செல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்படும்.

கடந்த இரண்டு வருடங்களில் நாட்டில் ஏற்பட்ட வரிசையுகம் என்பன காணப்பட்டபோது நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

இந் நிலையில் இந்த நாட்டை பொறுப்பேட்க மறுப்பு தெரிவித்தவர்கள் இன்று 39 பேர் ஜனாதிபதி வேட்பாளாக போட்டியிடுகின்றார்கள் அன்று இந்த நாட்டில் இருந்து பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பொறுப்பேற்க எவரும் முன் வரவில்லை.

மலையக பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினை கடந்த நான்கு வருடங்கலாக காணப்படுகின்றது அதேபோல் பெருந்தோட்ட மக்களின் காணிப்பிரச்சினையும் உரிமை தொடா்பான பிரச்சினைகளும் 200வருடங்களாக இருக்கிறது.

ஆனால் தேவையான பொது ஓடி ஒழிந்தவர்கள் இன்று மலையக மக்கள் மீது அன்பு கொண்டு மலையக மக்களை தேடிகொண்டு வாக்கு சேகரிக்க முயற்சி செய்கிறார்கள்.

இவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்காக இன்று நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டு பதுளை மாவட்ட பெருந்தோட்ட மக்களை சந்திக்க விஜயம் செய்வது வினோதமாக உள்ளது” என குறிப்பிட்டார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
அனுர ஜனாதிபதியானால் ஆறுமாதமே ஆட்சிக் காலம்; ஹிருணிகா தெரிவிப்பு!

அனுர ஜனாதிபதியானால் ஆறுமாதமே ஆட்சிக் காலம்; ஹிருணிகா தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு