குழந்தைகளுக்குப் போலியோ தடுப்புமருந்து அளிப்பதற்காக காசாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் போரை நிறுத்திவைக்க இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது .
குழந்தைகளுக்குப் போலியோ தடுப்பு மருந்து போன்ற நோய்த் தடுப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்படாததால் காய்ச்சல் , காலரா போன்ற நோய்கள் அங்கு அதிக அளவில் பரவிவருகின்றன.
25 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் போலியோ பரவல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்தது. இந்தச் சூழலில்,போலியோ தடுப்புமருந்து அளிப்பதற்காக காசாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் போரை நிறுத்திவைக்க இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது .
இந்த நிலையில், இஸ்ரேலும் ஹமாஸும் காசா பல்வேறு பகுதிகளில் 3 நாட்கள் போரை இடைநிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதனால் போலியோவுக்கு எதிரான முதல் சுற்று தடுப்பூசியை வழங்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.