இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் விவகாரங்கள் தற்போது சூடு பிடித்து வருகிறது.
அதன் அடிப்படையில் இம்மாதம் நடக்கவிருக்கும் தேர்தல் தொடர்பில் புதிய எச்சரிக்கை ஓன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் டியூஷன் வகுப்புகள் மற்றும் சமூக வலைதளங்கள் ஊடாக நடத்தப்படும் பல்வேறு கணக்கெடுப்புகள் குறித்து விசாரணை நடத்தி, இவ்வாறான நடவடிக்கைளை மேற்கொள்வோரை கைது செய்ய பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.