Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு கன்னன்குடா மகா வித்தியாலயத்தின் 135வது பாடசாலை தின நடைபவனி!

மட்டக்களப்பு கன்னன்குடா மகா வித்தியாலயத்தின் 135வது பாடசாலை தின நடைபவனி!

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதனை படைத்து வரும் கன்னன்குடா மகா வித்தியாலயத்தின் 135 வது பாடசாலை தினத்தை முன்னிட்டு நடைபவனி ஓன்று நேற்று முன்தினம் (01)காலை நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் ரீ.கரிகாலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில், பாடசாலை வளாகத்தில் வைத்து பாடசாலை தினத்தை நினைவு கூறும் வகையில் கேக் வெட்டப்பட்டு அதனைத் தொடர்ந்து நடை பவனியானது ஆரம்பமாகியது.

காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகிய நடைபவனியில் பாடசாலை பாண்டு வாத்திய குழுவின் அணிவகுப்புடன் பாடசாலை மாணவர்கள் பழைய மாணவர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

இந்நடைபவனியில் போதைப்பொருள் ஒழிப்பு சம்மந்தமாகவும் சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றை பற்றிய மேலும் பல விழிப்புணர்வூட்டும் பதாதைகள் மாணவர்களால் கொண்டு செல்லப்பட்டதுடன், கலை கலாசார நிகழ்வுகளுடனும் மாணவர்களின் ஆடல் பாடல்களுடன் இடம்பெற்ற இந் நடைபவனியில் விழிப்புணர்வூட்டும் வகையிலான வாகன பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.

பெருமளவான மாணவர்களுடன் நடைபெற்ற இந் நடைபவனியானது, பாடசாலையிலிருந்து கன்னன்குடா ஊடாக கரயாக்கன் தீவையடைந்து அங்கிருந்து தாண்டியடி ஊடாக மீண்டும் பாடசாலை வளாகத்தை வந்தடைந்தது.

பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக இடம் பெற்ற பாடசாலை தின நடைபவனியில் பாடசாலைக்கு காணி நன்கொடை செய்த நன்கொடையாளர்களின் உருவப்படங்கள் காட்சிப்படுத்த்தப்பட்டிருந்ததுடன், பவனியில் அதிகளவிலான பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பாடசாலை மைதானத்தில் இடம் பெற்ற பிரதான நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வின் போது அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, தேசிய கொடி மற்றும் பாடசாலை கொடி என்பன ஏற்றப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

அதனைத் தொடர்ந்து பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

அத்தோடு விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பழைய மாணவர்களுக்கும் இதன் போது அதிதிகளினால் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி உள்ளிட்ட, வலயக் கல்லி அலுவலகத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

Tags: BatticaloaNewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை; ஆலையடிவேம்பில் 04 பேர் கைது
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை; ஆலையடிவேம்பில் 04 பேர் கைது

May 15, 2025
எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவிப்பு
செய்திகள்

எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவிப்பு

May 15, 2025
மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா
செய்திகள்

மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா

May 15, 2025
ஹர்ஷன் டி சில்வா கைது!
செய்திகள்

ஹர்ஷன் டி சில்வா கைது!

May 15, 2025
அஸ்வெசும நலன்புரித்திட்டம் நிறுத்தப்படுவதாக போலிச்செய்தி;நலன்புரி நன்மைகள் சபை
செய்திகள்

அஸ்வெசும நலன்புரித்திட்டம் நிறுத்தப்படுவதாக போலிச்செய்தி;நலன்புரி நன்மைகள் சபை

May 15, 2025
விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை ஆராய மகிந்த முன்னெடுத்த நடவடிக்கை
செய்திகள்

விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை ஆராய மகிந்த முன்னெடுத்த நடவடிக்கை

May 15, 2025
Next Post
இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான சத்திய பிரமாணம்!

இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான சத்திய பிரமாணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.