ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான இன்று (02) காலை சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துகொண்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து தலதா அத்துகோரல அண்மையில் விலகியிருந்தார்.
இதனையடுத்து ஏற்பட்டிருந்த வெற்றிடத்திற்காகவே அவர் நியமிக்கப்பட்டு சத்திய பிரமாணம் செய்துகொண்டார்.
தலதா அத்துகோரல தனது பதவியிலிருந்து விலகுவதாக ஓகஸ்ட் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உணர்வுபூர்வமான உரையை ஆற்றிய அவர், ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடுவதில் தமக்கு விருப்பம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
தலதா அத்துகோரல ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த மறைந்த காமினி அத்துகோரலவின் சகோதரி ஆவார். 2004 இல் முதன்முதலில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதேவேளை, 2020 ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கருணாரத்ன பரணவிதான 36,787 வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.