Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழரசு கட்சியின் தீர்மானம் தமிழ் மக்களை பாதிக்காது; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

தமிழரசு கட்சியின் தீர்மானம் தமிழ் மக்களை பாதிக்காது; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

9 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழரசு கட்சியின் மத்திய குழு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவிக்க முன்னரே மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானித்து விட்டதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தமிழரசு மத்திய குழு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்த கருத்து தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழரசு கட்சியினுடைய தீர்மானம் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை அது அவர்களின் கட்சி சார்ந்த விடயம்.

நான் தேர்தல் திகதி ஆரம்பக்க முன்னரே ரணில் விக்கிரமசிங்க தான் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய தலைவர் அவருக்கு எனது ஆதரவை வழங்கினேன்.

மக்கள் வரிசை யுகத்தில் பட்ட துன்பத்தை இன்னும் மறக்கவில்லை அதனை நீக்கிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதனையும் மக்கள் மறக்கவில்லை.

தமிழரசு கட்சியை சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்க போவதாக அறிவிக்க முன்னரே மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்து விட்டார்கள்.

ஏனெனில் கடந்த கால அனுபவம் இதற்கு நல்ல உதாரணம். ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க விடாமல் தடுத்ததன் காரணமாக ஏற்பட்ட அழிவுகளை மக்கள் நன்கு உணர்ந்து இருப்பார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் தெற்கு மக்களாக இருந்தாலும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களாக இருந்தாலும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவு வழங்குவார்கள் .

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்குகின்ற நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு வழங்கும் அதிகப்படியான வாக்குகள் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

மக்களின் ஆதரவு எனக்கு பலமடையும் சந்தர்ப்பங்களில் மக்களின் எதிர்பார்ப்புகளை விரைவாகவும் சாணக்கியமாகவும் செய்து முடிப்பேன்.

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தில் நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவரும் நிலையில் நாட்டை மீண்டும் பாதாள நிலைக்கு கொண்டு செல்ல நாட்டு மக்கள் தயாரில்லை.

ஆகவே, ஜனாதிபதி தேர்தலில் தமிழரசு கட்சியின் தீர்மானம் ரணில் விக்கிரமசிங்கவையோ அல்லது தமிழ் மக்களையோ பாதிக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanewstna

தொடர்புடையசெய்திகள்

காங்கேசன்துறையில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
செய்திகள்

காங்கேசன்துறையில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

May 17, 2025
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் பெண்ணியம் சார் செயற்பாட்டாளர்கள் மகஜர் வழங்கி வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் பெண்ணியம் சார் செயற்பாட்டாளர்கள் மகஜர் வழங்கி வைப்பு

May 17, 2025
கடுவெல நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டாரவின் அலுவலகம் சீல் வைப்பு
செய்திகள்

கடுவெல நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டாரவின் அலுவலகம் சீல் வைப்பு

May 17, 2025
ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 9 பேர் பலி
உலக செய்திகள்

ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 9 பேர் பலி

May 17, 2025
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவஞ்சலி
செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவஞ்சலி

May 17, 2025
டிஜிட்டல் பொருளாதார தீர்வுகளை துரிதப்படுத்துமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல்
செய்திகள்

டிஜிட்டல் பொருளாதார தீர்வுகளை துரிதப்படுத்துமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல்

May 17, 2025
Next Post
கொழும்பு துறைமுகத்தில் வரிசையில் நின்ற வாகன சாரதி உயிரிழப்பு!

கொழும்பு துறைமுகத்தில் வரிசையில் நின்ற வாகன சாரதி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு