2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இன்று தபால் மூல வாக்களிப்பின் முதலாம் நாளானா இன்று (04) மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் பொலிஸ் அலுவலகங்கள் மற்றும் மட்டக்களப்பு தேர்தல் பணிமனை ஆகியவற்றில் இந்த தபால் மூல வாக்களிப்பு நடைபெற்றது.
இம் மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 13 ஆயிரத்து 116 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும், தபால் மூல வாக்களிப்பு நடைபெறுவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸ் திணைக்களம் செய்திருப்பதாகவும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார்.
இந்த தபால் மூல வாக்களிப்பு நிலையங்களுக்கு தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல் மேற்பார்வை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் தேர்தல் முகவர்களும் வாக்களிப்பு நிலையங்களில் சமூகமளித்திருப்பதாகவும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஜஸ்டினா முரளிதரன் மேலும் தெரிவித்தார்
அதேசமயம் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம், தேர்தல் பணிமனை ஆகியவற்றில் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (04) திகதி காலை 8.30 மணி முதல் ஆரம்பமாகி தபால்மூல வாக்களிப்பு சுமூகமான நிலையில் இடம்பெற்றதுடன்,
திராய்மடுவில் அமைந்துள்ள புதிய மாவட்ட செயலகத்திலும், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திலும் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் கட்சிகள் சார்பில் பிரதி நிதிகள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.