நாட்டில் மாதாந்திர எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த விலை திருத்தம் இன்று (31) நள்ளிரவில் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையும் இந்த நாட்களில் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் நாட்டில் எரிபொருள் விலை குறையக்கூடும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், இன்று நள்ளிரவு மாதாந்திர எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, கடந்த மாதம் அரசாங்கம் எரிபொருள் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.