தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச நூலக ஆராய்ச்சி மாநாடு இன்று (06) மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 4.00 மணி வரை தேசிய நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள், வெளிநாட்டு அறிஞர்களின் பங்குபற்றுதலுடன் இச்சர்வதேச நூலக ஆராய்ச்சி மாநாடு இடம்பெறவுள்ளது.
இம்முறை “ Information for Development : A Way Forward to Address Current Global Challenges ” எனும் தொனிப் பொருளின் கீழ் சர்வதேச நூலக ஆராய்ச்சி மாநாடு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக தகவலுக்கு www.natlib.lk/icnatlib2024 எனும் இணையதளத்தைப் பார்வையிடலாம்.