மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளைகளும் அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்றையதினம் (05) குறித்த அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன் படி, 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானி மின்சாரம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் வழங்கல் மற்றும் விநியோகத்தை அத்தியாவசிய பொது சேவைகளாக குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னரும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுமாறு ஆயுதப் படைகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டார்.
அதன் படி, குறித்த வர்த்தமானி அறிவித்தலானது தேர்தலுக்கு முன்னோடியாக இருக்கும் முக்கியமான காலகட்டத்தில் பாதுகாப்பையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்த இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளை ஒழுங்குபடுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ளது.