கொழும்பு மாநகர சபையில் உள்ள 8 அரச அடுக்குமாடி குடியிருப்புகள் பாரியளவில் பாழடைந்து காணப்படுவதால் அந்த வீடுகளில் வசிக்கும் மக்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த வீட்டுத் தொகுதிகளை இடித்துத் தள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாகந்த அடுக்குமாடித் திட்டம் பம்பலப்பிட்டி வீடமைப்புத் திட்டம் வேல்ஸ் குமாரமாவத்தை வீடமைப்புத்திட்டம் சிறிதம்மா மாவத்தை வீடமைப்புத் திட்டம் கந்தபுர அடுக்குமாடித் திட்டம் பி 36 மாளிகாவத்தை வீடமைப்புத் திட்டம் ஜி. எச். ஜே. கே. எம். வீடமைப்புத் திட்டம் மற்றும் என் மிஹிந்து மாவத்தை வீட மைப்புத் திட்டம் ஆகிய எட்டு வீட்டுத் தொகுதிகள் இவ்வாறு ஆபத்தான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாமைத்துவ அதிகாரசபை அந்த வீட்டுத் தொகுதிகளை இடித்துத் தள்ளுமாறு
வீடமைப்பு அமைச்சிடம் முன்மொழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.