Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆதரவு!

பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆதரவு!

9 months ago
in அரசியல், உலக செய்திகள், செய்திகள்

இலங்கைத் தீவில் சிறிலங்காவின் அரசுத் தலைவர் தேர்தலை மையப்படுத்தி, தமிழர் தேசத்தினால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விடுதலை அரசியலின் முனைப்பான தேசமாக, தேசிய இனத்தின் திரட்சியாக, சங்கு சின்னத்திற்கு மட்டும் வாக்களிக்குமாறு இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களை, மற்றும் வாக்களிக்க தகுதியுள்ள புலம்பெயர் தமிழர்களை உரிமையோடு வேண்டுகின்றோம் என தெரிவித்துள்ளது.

கடந்த செப்ரெம்பர் 7ம் நாள் சனிக்கிழமை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் இது தொடர்பான கருத்தாடல் இடம்பெற்றிருந்ததோடு, ஏகமனதாக இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய பேரியக்கத்திற்கான தொடக்க புள்ளியாக தமிழ் பொதுக்கட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்ப் பொது வேட்பாளருக்குரிய தேர்தல் அறிக்கையானது, தமிழர் தேசத்தின் அடிப்படைக் கோட்பாட்டு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக கருதுவதோடு, பொதுவாக்கெடுப்பினை நோக்கிய செயல்முனைப்புக்கான தொடக்க புள்ளியாக எண்ணுகின்றோம் என அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்கள் ஓர் அரசுக்குரிய தேசிய இனம் என்பதனை வெளிகாட்டி, நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை, 2009ம் ஆண்டு மிகப்பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக அழித்த சிங்கள பௌத்த பேரினவாத அரசு, தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்து நிற்கின்றது.

இராணுவ மயமாக்கல், பௌத்த மயமாக்கல், சிங்கள மயமாக்கல் ஊடாக தமிழர் தேசத்தில் தனது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பினை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்ற சிங்கள பேரினவாத அரசு, ஈழத்தமிழர்களை தனது அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் அடிமைகளாக வைத்திருக்க முனைவதோடு, ஈழத்தமிழர்கள் ஓர் தேசிய இனம் என்பதனை நீக்கம் செய்ய முனைகின்றது.

இச்சூழலில் ஈழத்தமிழர் தேசிய இனமாக, தேசமாக தமது திரட்சியினை உலகிற்கு சங்காய் முழங்க வேண்டிய காலமாக இன்றிருக்கின்றது.

இலங்கைத் தீவினை மையப்படுத்திய இந்திய பெருங்கடல் புவிசார் பூகோள அரசியலில், தமிழர் தேசத்தின் திரட்சியினை வெளிக்காட்டுவதன் வழியே, நம்மை சக்திமிக்க ஓர் தரப்பாக வெளிக்காட்ட வேண்டிய அரசியற்சூழல் காணப்படுகின்றது.

இந்நிலையில் தமிழர் தேசத்தின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான நிலைப்பாட்டினை, அனைத்துலக சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையில், சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலை ஓர் கருவியாக கையாளும் ஓர் உத்தியாகவே, தமிழர் தேசத்தினரால் முன்மொழியப்பட்டுள்ள தமிழ்பொதுவேட்பாளரை நாம் கருதுகின்றோம்.

தமிழ்த் தேசிய பேரியக்கத்திற்கான தொடக்க புள்ளியாக தமிழ் பொதுக்கட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்ப் பொதுவேட்பாளருக்குரிய தேர்தல் அறிக்கையானது, தமிழர் தேசத்தின் அடிப்படைக் கோட்பாட்டு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக கருதுவதோடு, பொதுவாக்கெடுப்பினை நோக்கிய செயல்முனைப்புக்கான தொடக்க புள்ளியாக எண்ணுகின்றோம்.

தமிழர் தேசம், சிங்கள அரச கட்டமைப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு பொறுப்பளிக்கக் கூடிய வகையில் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை வலியுறுத்தியும்…

சிறீலங்கா தொடர்பில் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், நிலைமாறுகால நீதியினை வலியுறுத்திய நிலையில், தமிழர் தேசத்தின் பரிகார நீதியினை வலியுறுத்தியும்…..

தமிழினப்படுகொலைக்கு பொறுப்புக்கூற வைக்க, ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானங்கள் வழியே, பொறுப்பு கூறலை ஐநா பாதுகாப்புச் சபையிடம் பாரப்படுத்துவதன் மூலம் இன அழிப்புக்கு எதிரான பன்னாட்டு விசாரணைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டுமெனவும்…..

தமிழர் தலைவிதி தமிழர் கையில் பொதுவாக்கெடுப்பினை வலியுறுத்தும் வகையில் தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதனை தாமே நிர்ணயிப்பதற்குப் பொருத்தமான பன்னாட்டு ஏற்பாடுகளைக் கோருவதற்கு உரித்துடையவர்கள் என்பதனையும்…..

சிங்கள தேசத்தின் பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணிகளில் முதன்மையாக தமிழர் தேசத்தின் மீதான இராணுவ நடவடிகையும், இராணுவ ஆக்கிரமிப்பு செலவீனங்களுமே என்பதனை வலியுறுத்தியும்…..

தமிழர் தேசத்தின் அரசியல் இறைமை என்பது நிலத்தை மட்டுமல்ல கடலையும் உள்ளடக்கியது என்பதனையும் வலியுறுத்தி நிற்கின்ற தமிழ்பொதுவேட்பாளருடைய தேர்தல் அறிக்கையினை வரவேற்பதோடு, தமிழ்பொதுவேட்பாளரை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கின்றது.

தேர்தல் அரசியலைக் கடந்து, விடுதலை அரசியலின் முனைப்பாக தேசமாக, தேசிய இனத்தின் திரட்சியாக, சங்கு சின்னத்திற்கு மட்டும் வாக்களிக்குமாறு இலங்கைத்தீவில் உள்ள தமிழர்களை, மற்றும் வாக்களிக்க தகுதியுள்ள புலம்பெயர் தமிழர்களை உரிமையோடு வேண்டுகின்றோம் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewselectionSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 528 பேர் கைது
செய்திகள்

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 528 பேர் கைது

May 29, 2025
பஹ்ரைனில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்
செய்திகள்

பஹ்ரைனில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்

May 29, 2025
மட்டக்களப்பு வீடமைப்பு திட்டத்திற்கு 85 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்திருக்கின்றோம் – கந்தசாமி பிரபு
செய்திகள்

மட்டக்களப்பு வீடமைப்பு திட்டத்திற்கு 85 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்திருக்கின்றோம் – கந்தசாமி பிரபு

May 29, 2025
உணவை தேடி பல மைல் நடந்த பாலஸ்தீனிய மக்கள் உணவு வழக்கும் பகுதிக்குள் பெருமளவில் திரண்டதால் இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகம்
உலக செய்திகள்

உணவை தேடி பல மைல் நடந்த பாலஸ்தீனிய மக்கள் உணவு வழக்கும் பகுதிக்குள் பெருமளவில் திரண்டதால் இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகம்

May 29, 2025
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 6 மாத கால புனர்வாழ்வு
செய்திகள்

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 6 மாத கால புனர்வாழ்வு

May 29, 2025
நாட்டில் தனிநபர் ஒருவரின் வாழ்க்கைச் செலவு 4 ஆண்டுகளில் இரட்டிப்பாக அதிகரிப்பு
செய்திகள்

நாட்டில் தனிநபர் ஒருவரின் வாழ்க்கைச் செலவு 4 ஆண்டுகளில் இரட்டிப்பாக அதிகரிப்பு

May 28, 2025
Next Post
மன்னாரை பண்டைய தமிழர்கள் ஆட்சி செய்ததற்கான தொல்லியல் தடயங்கள் கண்டுபிடிப்பு!

மன்னாரை பண்டைய தமிழர்கள் ஆட்சி செய்ததற்கான தொல்லியல் தடயங்கள் கண்டுபிடிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.