வவுனியா மகாறம்பைக்குளம் 2 ஆம் ஒழுங்கை பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருந்த தொகை மரங்கள் இருப்பதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கெப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள மரக்காலை ஒன்று சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 15 இலட்சம் பெறுமதியான மரங்கள் பொலிஸார் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பிரதிபொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகர அவர்களின் உத்தரவில், வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாலின் அஜந்த பெரேராவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு (DCDB) பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ணவின் தலைமையில் இந்நடவடிக்கை இடம்பெற்றது.
இதனையடுத்து, குற்றச்சாட்டில் மரக்காலை உரிமையாளருடன் பணியாளர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.