Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓரங்கட்டப்பட்ட சமூக மக்களுக்கான வாழ்வாதார செயற்திட்டம்!

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓரங்கட்டப்பட்ட சமூக மக்களுக்கான வாழ்வாதார செயற்திட்டம்!

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓரங்கட்டப்பட்ட சமூக மக்களுக்கான நீடித்து நிலைக்கும் வாழ்வாதார விவசாய செயற் திட்டங்கள் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் ஆரம்பித்து வைக்கபட்டது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் ஒத்துழைப்புடன் டயகோனியா சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இந்தத் திட்டம் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தினால் அமுலாக்கம் செய்யப்படுகின்றது.

இதன் அறிமுக நிகழ்வு மட்டக்களப்பிலுள்ள இளைஞர் மன்ற மண்டபத்தில் ஞாயிறன்று 25.08.2024 இடம்பெற்றது.

அறிமுக நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீட பேராசிரியர் எஸ். சுதர்ஷன், வாகரைப் பிரதேச செயலக கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள், ஓய்வு நிலை சிரேஷ்ட விரிவுரையாளர் கே. பிறேம்குமார், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிருவாக அலுவலர் கந்தன் நிர்மலா, விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி இந்துமதி ஹரிஹரதாமோதரன் சமூக ஒருங்கிணைப்பாளர்களான பி. முரளீதரன், குணராஜ் சிந்துஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்த்,

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனம் வித்தியாசமான அணுகுமுறையில் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை கடந்த காலத்திலும், சமகாலத்திலும் அமுலாக்கி வருகின்றது.

குறிப்பாக தற்போது ‘சமூக முயற்சிகள் மூலம் நீடித்து நிலைக்கக் கூடிய வாழ்வாதார மேம்பாட்டிற்கான மற்றும் புதுமையான கிராமப்புற தொழில் முயற்சிகள்’ திட்டத்தின் கீழ் கல்லரிப்புஇ தட்டுமுனைஇ குஞ்சன்குளம் ஆகிய கிராமங்களில் அமுலாக்கம் செயய்பப்படவுள்ள திட்டம் சமூகப் பங்களிப்புடன் இடம்பெறவுள்ளது.

ஆதிவாசிகள் சமூகம் வாழும் குஞ்சங்குளம் கிராமம் அது ஆக அடிமட்ட வாழ்க்கைத் தரத்தில் உள்ள மக்கள் வாழும் இடமாகும். கல்லரிப்பு, கட்டுமுனை கிராமங்களும் முன்னேற்றப்பட வேண்டிய இடங்களாகும். இந்தத் திட்டத்தை வெற்றியளிக்கச் செய்ய வேண்டும்.

அதற்கு அனைவரதும் பூரண ஒத்துழைப்புக்கள் தேவை. உற்பத்திகளைத் தொடங்குகின்ற அதேவேளை சந்தைப்படுத்தலுக்கும் உரிய வழிவகைகளை ஏற்பாடு செய்ய செய்து கொடுக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்தையும் முன்னேறற்றும் இலக்கை அடைவதற்கு ஒவ்வொரு அரச அலுவலரும் தனது தார்மீகக் கடiயை நிiறவேற்ற வேண்டும்’ என்றார்.

இத்திட்டம் கிழக்குப் பல்கலைக்கழக துறைசார் நிபுணர் குழுவினால் முன்னராகவே ஆய்வு செய்யப்பட்டதாகும். அதனடிப்படையில் மூன்று கிராமங்களிலிருந்தும் ஆர்வக் குழுக்களான விவசாய உற்பத்திப் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன் தொடர்ச்சியாக வாகரை பிரதேச செயலகத்தில் கேட்போர் கூடத்தில் வாகரை பிரதேசே செயலக உதவி திட்டமிடல் பிரிவு தலைவர் சுதர்சன் அவர்களின் நெறியாழ்கையில் ஊழஅஅரnவைல ழுசதையனெயவழைn 30.08.2024.அன்று விழுது உத்தியோகத்தர் P.முரளிதரன் அவர்களின் தெழிவுபடுத்தலுடன் விழுது உத்தியோகத்தர்கள் சுகிர்தவிழி மற்றும் சிந்து அவர்களின் பங்கு பற்றலுடன் பயனாளர்கள் மற்றும் உத்தியோகத்தர் கருத்து பரிமாற்றம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த மாணவன்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
செய்திகள்

பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த மாணவன்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

May 15, 2025
துருக்கிக்கு 304மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனைக்கு அமரிக்கா ஒப்புதல்
உலக செய்திகள்

துருக்கிக்கு 304மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனைக்கு அமரிக்கா ஒப்புதல்

May 15, 2025
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பது தூதுவரின் முக்கிய பொறுப்பாகும்; ஜனாதிபதி
செய்திகள்

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பது தூதுவரின் முக்கிய பொறுப்பாகும்; ஜனாதிபதி

May 15, 2025
இரு மாணவர்களிடையே கை கலப்பில் முடிந்த காதல் பிரச்சனை; திருமலையில் சம்பவம்
செய்திகள்

இரு மாணவர்களிடையே கை கலப்பில் முடிந்த காதல் பிரச்சனை; திருமலையில் சம்பவம்

May 15, 2025
அக்கரைப்பற்றில் சுனாமியினால் பாதிப்புற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
செய்திகள்

அக்கரைப்பற்றில் சுனாமியினால் பாதிப்புற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

May 15, 2025
பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை; ஆலையடிவேம்பில் 04 பேர் கைது
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை; ஆலையடிவேம்பில் 04 பேர் கைது

May 15, 2025
Next Post
மட்டக்களப்பில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பேன்; நாமல் தெரிவிப்பு!

மட்டக்களப்பில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பேன்; நாமல் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.