கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையில் சுமார் 29 கோடி ரூபாய் பெறுமதியான செப்பு கம்பிகள் திருடர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளன என்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி
ஒருவர் தெரிவித்துள்ளார்.இவ்வாறான திருட்டுகள் நெடுஞ்சாலைகளுக்கு கடும் சிக்கலாக மாறியுள்ளது.
திருடர்கள் செப்பு கம்பிகள் மற்றும் மின்சார கேபிள்களை நெடுஞ்சாலைகளில் இருந்து
அகற்றுகிறார்கள். மற்றைய நெடுஞ்சாலைகள் மற்றும் புதியகளனி பாலம் போன்றவற்றிலும்
இதே நிலையே காணப்படுகிறது என்றும் இங்கு ஆணிகள் வெட்டப்படுதல் மற்றும் செப்பு கம்பிகளை வெட்டுதல் பெரும் பிரச்னையாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.