பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் வேளையில் அந்நாட்டின் அரசு ஏற்கனவே சீனா, சவுதி அரேபியா என பல நாடுகளிடம் இருந்தும் அதிகப்படியான கடன்களை பெற்றுள்ள நிலையிலும், ஐ.எம்.எப் அமைப்பிடம் இருந்து கடன் பெற போதுமானதாக இல்லை.
இதனால் சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் அரசு வெளியிட்ட பட்ஜெட் அறிக்கையை திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்துள்ளது. திருத்தப்பட்ட பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்த பின்பு பாகிஸ்தான் மக்கள் அந்நாட்டு மக்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நிதி அமைச்சர் இஷாக் தார் இருவரையும் திட்டி தீர்த்து வருகின்றனர்.
பாகிஸ்தான் அரசு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சர்வதேச நாணய நிதியத்தின் 6.7 பில்லியன் டாலர் நிதியுதவியை பெற வேண்டும் என்பதில் இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக அரசு வெளியிட்ட திருத்தப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் அடுத்த நிதியாண்டில் கூடுதலாக 215 பில்லியன் ரூபாய் வரி வருமானமும், 85 பில்லியன் ரூபாய் செலவின குறைப்பும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இப்புதிய திருத்தப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் பாகிஸ்தான் நாட்டின் வருமான வரி பெயர்படுத்தப்பட்டு உள்ளது, இதேபோல் பெட்ரோ் வளர்ச்சி கட்டணம் 50 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இவை இரண்டும் பாகிஸ்தான் நாட்டின் விலைவாசியை தாறுமாறாக உயர்த்த உள்ளது. இதைவிட முக்கியமாக பாகிஸ்தான் ஷெபாஸ் ஷெரீப், அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியத்தில் எவ்விதமான மாற்றத்தையும் செய்யவில்லை என்பது அந்நாட்டு சாமானிய மக்கள் மத்தியில் அதிகப்படியான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் டிவிட்டரில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசையும், நிதி அமைச்சர் இஷாக் தார்-ஐ கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதில் அசிம் என்பவர் டிவிட்டரில் நீங்கள் ஒரு நாளுக்கு 56 டலார், வருடத்திற்கு 20000 டாலர் சம்பாதித்தால் அதிகப்படியான 35 சதவீத வருமான வரி பிரிவில் வருமான வரி வசூலிக்கப்படும். வாவ் வரி வருமானத்தை அதிகரிக்க என்ன ஒரு வழி..
வருடத்தில் 2 மாத சம்பளத்தை அரசுக்கு வரியாக செலுத்துகிறேன், இதற்கு மாற்றாக எனக்கு என்ன கிடைக்கிறது. பாகிஸ்தானை விட்டு விரைவில் வெளியேற வேண்டும் எனவும் ரெட்பிளாக் என்பவர் டிவீட் செய்துள்ளார்.
30 சதவீத வரியை TDS ஆகவும் 18 சதவீத வரியை ஜிஎஸ்டி ஆகவும் செலுத்துகிறோம், வருமானத்தில் பாதியை அரசுக்கு வரியாக செலுத்துகிறோம். ஆனால் பாகிஸ்தானை விட்டு மக்கள் ஏன் வெளியேறுகிறார்கள் என கேட்கிறார்கள். தற்போது வசூலிக்கும் அதிகப்படியான வரி எவ்விதமான மாற்றமும் நடக்கவில்லை, இப்போது கூடுதலாக வரி வசூலிக்க உள்ளீர்கள்.