2025 பெப்ரவரிக்குள் அனைத்து வாகன இறக்குமதி தடை/கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் ரூபாயின் வலிமை ஆகியவற்றுடன், பெப்ரவரி 2025 க்குள் அனைத்து வாகன இறக்குமதி தடை/கட்டுப்பாடுகளையும் நீக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தனது எகஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பொருளாதாரத்தில் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.