Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற படகு கவிழ்ந்து விபத்து; புலம்பெயர் மக்கள் 8 பேர் உயிரிழப்பு!

ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற படகு கவிழ்ந்து விபத்து; புலம்பெயர் மக்கள் 8 பேர் உயிரிழப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற போது, ​​சிறு படகு ஒன்று கவிழ்ந்ததில் 8 புலம்பெயர் மக்கள் மரணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த விபத்தானது நேற்றையதினம் (15) இடம்பெற்றுள்ளது.

சிறு படகுகளில் பிரித்தானியாவுக்கு படையெடுக்கும் புலம்பெயர் மக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் அரசாங்கங்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறது.

பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் பொருட்டு பல ஆயிரம் யூரோ தொகையை ஆட்கடத்தல் நபர்களுக்கு செலவிட்டு சிறு படகுகளில் இடம் பிடிக்கின்றனர்.

இந்த விபத்தானது படகு புறப்பட்ட சில மணி நேரத்திலேயே நடந்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறு படகுகளில் மேற்கொள்ளும் அபாயகரமாக பயணத்தை சமீப நாட்களில் பல முறை புலம்பெயர்ந்தோர் முன்னெடுத்துள்ளதாக கடல்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில், கடந்த 2 நாட்களில் மட்டும் 24 மணி நேரத்தில் 200 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

வடக்கு பிரெஞ்சு கடற்கரையில் டசின் கணக்கான மக்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று இந்த மாதம் கவிழ்ந்ததில் குறைந்தது 12 புலம்பெயர்ந்தோர் இறந்தனர்.

இதில், பெரும்பாலானோர் எரித்திரியாவை சேர்ந்தவர் என்றே கூறப்படுகிறது.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை ஆங்கில கால்வாயை கடக்கும் முயற்சியில் 37 புலம்பெயர் மக்கள் இறந்துள்ளனர். 2023ல் இறப்பு எண்ணிக்கை வெறும் 12 என்றே கூறப்படுகிறது.

இதனிடையே, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 22,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவிற்கு வந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை
உலக செய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை

July 30, 2026
தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது
செய்திகள்

தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது

July 30, 2026
சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!
செய்திகள்

சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!

July 30, 2026
வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
Next Post
அரியநேத்திரனை நேரில் சென்று சந்தித்த மாவை சேனாதிராஜா!

அரியநேத்திரனை நேரில் சென்று சந்தித்த மாவை சேனாதிராஜா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு