Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை

2 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் பிரபல பெண் பத்திரிகையாளருக்கு ரஷ்யா நீதிமன்றம் 12 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது

பிரபல பத்திரிகையில் அறிவியல் மற்றும் மருத்துவ பிரிவில் தர்யா ஷிபச்சேவா பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார்.

இவர் ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் உக்ரைன் நாட்டுக்கு இரகசியமாக பண உதவி செய்ததாக கூறி, கடந்த 2025 ஆம் ஆண்டு தேசத்துரோக வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு மாஸ்கோ நீதிமன்றத்தில் மூடிய கதவுகளுக்கு பின்னால் ரகசியமாக நடந்து வந்தது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தர்யா ஷிபச்சேவாவுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தண்டனையை குறைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக, தன் மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

ஆனாலும், நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்ததால், தீர்ப்பை கேட்டு அவர் நீதிமன்றத்திலேயே கடும் அதிர்ச்சியடைந்தார்.

2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து, பத்திரிகையாளர்களுக்கு எதிராக அதிபர் புதின் அரசு பல்வேறு கடுமையான தணிக்கை சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

இந்த தீர்ப்புக்கு முன்பாகவே, ரஷ்யாவில் ஏற்கனவே பல பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சர்வதேசப் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

மேற்கத்திய நாடுகளுக்கு உளவு பார்த்ததாகவும், உக்ரைனுக்கு உதவியதாகவும் கூறி பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் உலக அளவில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்
செய்திகள்

நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்

September 13, 2026
திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது
செய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது

September 13, 2026
“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி
செய்திகள்

“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி

September 13, 2026
கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது
செய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது

September 13, 2026
அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
Next Post
விபத்து பகுதிகளுக்கு அம்புலன்ஸ் செல்லும்முன் செல்லப்போகும் மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை

விபத்து பகுதிகளுக்கு அம்புலன்ஸ் செல்லும்முன் செல்லப்போகும் மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு