இலங்கையின் பொருளாதாரத்தை 180 பில்லியன் டொலர்களைத் தாண்டிய பொருளாதாரமாக மாற்றும் திட்டத்தை செயற்படுத்துகிறோம் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாவாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எதிர்வரும் 5 வருடங்களில் தெற்காசியாவில் வங்கி மற்றும் நிதியுதிவி வழங்கும் கேந்திர மையமாக இலங்கையை மாற்றுவதே எனது இலக்கு.
கொழும்பு துறைமுக நகரில் வெறுமனே அடுக்குமாடு கட்டிடங்களை கட்டுவதாக நினைத்தார்கள். அதுதான் இல்லை. அது பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான மையம்.
நாங்கள் விரும்புவது, உலக நிறுவனங்கள் தங்கள் வங்கி மற்றும் பரிவர்த்தனைகளுக்கு துறைமுக நகரைப் பயன்படுத்த வேண்டும்.
5 தொழில்நுட்ப கிராமங்களான சூரியவெவ, யாழ்ப்பாணம் மற்றும் 7 மையங்களை துறைமுக நகரத்துடன் இணைப்பதன் மூலம், மேல்மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, மினுவாங்கொட போன்று காலி, சூரியவெவ, தம்புள்ளை, குருநாகல், யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியாவில் உள்ள பிள்ளைகளும் பயன்பெறும் வகையில் நாம் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
நமது பொருளாதாரத்திற்கு அனுகூலங்களை அளிக்கக்கூடிய கொள்கை முடிவுகளின் அடிப்படையில், உலகின் உயர்மட்ட முதலீட்டாளர்களை நம் நாட்டிற்கு வரவழைத்து, நமது பொருளாதாரத்தை 180 பில்லியன் டொலர்களைத் தாண்டிய பொருளாதாரமாக மாற்றும் திட்டத்தையும், அத்துடன் வேலை வாய்ப்புகளையும் செயற்படுத்துகிறோம்.” என தெரிவித்துள்ளார்.