ரணிலுக்கு ஆதரவளிக்கும் வகையில் நாமலை போட்டியிலிருந்து விலக்கிக் கொள்ளுமாறு மகிந்தவிடம் உயர்மட்ட பிக்கு ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையில் இடம்பெற்ற பௌத்த மாநாட்டின் போதே தொடம்பஹல ராகுல தேரர் ( Rahula Thero ) இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே. எங்கு வேண்டுமானாலும் சொல்வேன் என்று ராகுல தேரர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ரணில் விக்ரமசிங்கவை எதிர்ப்பதும் ஏனைய வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவதும் நாட்டின் உண்மையான மதம், பாதுகாப்பு மற்றும் மொழிக்கு எதிரானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில்,சரியான முடிவை எடுப்பதும், தனது மகனின் வேட்புமனுவை தேர்தலில் இருந்து விலக்குவதும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
நீங்கள் ஒரு உண்மையான தலைவர் மற்றும் தேசபக்தர் என்றால், இந்த இக்கட்டான தருணத்தில் நீங்கள் நாட்டுக்காக இதைச் செய்ய வேண்டும் என்றும் ராகுல தேரர் கூறியுள்ளார்.