தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், அநுரகுமார திஸாநாயக்க, முன்னதாக தனது முகநூல் பக்கத்தில் இட்ட பதிவு வைரலாகிவருகின்றது.
வெளியாகியாகியிக்கும் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க, முன்னிலை வகிப்பதாக தெரியவருகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க, முன்னதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், “அவர்கள் எங்களை புதைக்க முயற்சித்தார்கள், நாங்கள் விதைகள் என்று அவர்களுக்கு தெரியாது.” என பதிவிட்டுள்ளார்.
இந்த முகநூல் பதிவினை அநுரகுமாரவின் ஆதரவாளர்கள், தற்போது அதிகம் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.