இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள அனுரகுமார திஸாநாயக்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் , “இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்கள்.
மக்களின் ஆணையை மதித்து, நமது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் உங்களுக்கு பலமும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.