சற்று முன்னர் மட்டக்களப்பு காத்தான் குடி அருங்காட்சியகத்துக்கு முன்னாலுள்ள பிரதான வீதியில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. பெண்ணொருவர் பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் (Activa) இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் (passion Plus) மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான யுவதி மயக்கமுற்று நடுவீதியில் கிடந்துள்ளார். பொதுமக்கள் அவரை வீதி ஓரத்திற்கு கொண்டுவந்த சிறிது நேரத்தில் வலிப்பு வருத்தமும் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் யாரும் அவருக்கு உதவ முன்வராது நீண்டநேரமாக இவர் வீதியிலே கிடந்துள்ளார்.
அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் தாமாக முன்வந்து குறித்த யுவதியை தூக்கி கொண்டு வைத்திய சாலைக்கு சென்றுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய இளைஞன் வீதியோரத்தில் நின்ற போக்குவரத்து அதிகாரிகளை பார்த்து மிரண்டே வீதியில் வந்த பெண்ணில் மோதுண்டதாக அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் குறித்த இளைஞனிடம் போதிய ஆவணங்கள் இல்லாமையும் , அவர் தலை கவசம் அணியாததுமே போக்குவரத்து அதிகாரிகளை பார்த்து மிரண்டமைக்கான காரணம் என அறிய முடிகிறது.