இலங்கையின் நிலையான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியின்போது அதன் உள்விவகாரங்களில் தலையிடாத கொள்கைகளைக் கடைப்பிடித்து, இறையாண்மைக்கு மதிப்பளித்து, ஆக்கப்பூர்வமான பங்கை ஆற்றுவதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பொன்றில் இலங்கையின் புதிய ஜனாதிபதித் தெரிவு தொடர்பில் கருத்து வெளியிடுகையில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அபிவிருத்தி உத்திகளுடன் அதிக ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கு இலங்கையின் புதிய ஜனாதிபதி மற்றும் அவரது புதிய நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது.
நேர்மையான பரஸ்பர உதவி மற்றும் நிலையான நட்பின் அடிப்படையில் எங்களது மூலோபாய கூட்டுறவு பங்காளித்துவத்தின் புதிய முன்னேற்றத்திற்கு பாடுபடுவோம் எனவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் குறிப்பிட்டுள்ளார்.