இலங்கையில் எதிர்காலத்தில் மேலும் பல நிலநடுக்கங்கள் பதிவாகலாம் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பல பகுதிகளை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன அடையாளம் கண்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் எதிர்காலத்தில் மேலும் பல நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும். இவ்வாறான நிலநடுக்கங்களால் அச்சம் கொள்ள தேவையில்லை.இலங்கையில் இவ்வாறான அதிர்வுகள் ஏற்படக்கூடிய பல பிரதேசங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.
சுனாமி எச்சரிக்கை
திருகோணமலையிலிருந்து உஸ்ஸங்கொடை வரையிலான பகுதியும், மலையகத்தில் உள்ள நீர்த்தேக்க பகுதிகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்படலாம்.
மேலும், சுமத்ராவின் முனையில் நிலநடுக்கம் ஏற்பட்டால், நாம் நிச்சயம் சுனாமி அலைகளையும் சந்திக்க நேரிடும்.
இலங்கையில் இருந்து சுமார் 1,260 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடல் எல்லையில் நேற்று (01) பிற்பகல் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
காலி, கொழும்பு, சாரஸ்ஸ மற்றும் எம்பிலிப்பிட்டிய பிரதேசங்களிலும் இந்த அதிர்வு உணரப்பட்டதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளதுடன்,தென்கிழக்கே கடலிலும் நேற்று மதியம் 12.59 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
மேலும், கொழும்பின் வெள்ளவத்தை கடற்கரை, பத்தரமுல்ல, காலி, அக்குரஸ்ஸ, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் இந்த அதிர்வு உணரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.