Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசுக்கு சொந்தமான வீடுகளையும் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

அரசுக்கு சொந்தமான வீடுகளையும் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திவரும் அனைத்து அரச வீடுகள் மற்றும் பங்களாக்களை உடனடியாக ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எழுத்து மூலம் இன்று (27) அறிவித்துள்ளது.

15 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஏற்கனவே அரச வீடுகள் மற்றும் பங்களாக்களை ஒப்படைப்பது குறித்து விசாரணை நடத்தியதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பல நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கிய கொழும்பு அரச பங்களாக்களின் எண்ணிக்கை 50 ஆகும்.

இதேவேளை பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி வரை முன்னாள் உறுப்பினர்கள் மாதிவெல குடியிருப்பைப் பயன்படுத்துவதற்கு நாடாளுமன்றத் தலைவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதியோ அல்லது தேர்தல் நடைபெற்று முடிந்த அடுத்த தினத்திற்கு முன்னரோ வீடுகளை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என நாடாளுமன்றத் தலைவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான கொடுப்பனவுகள், கட்டணம் மற்றும் ஏனைய வசதிகள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் இரத்து செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை அண்மித்த வீதிகள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது!

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை அண்மித்த வீதிகள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு