மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு இடம்பெற்ற வர்த்தகம் தொடர்பான தகவல்கள் எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு முழுமையான தரவுகளுடன் வெளிப்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்து தேர்தல் பிரச்சார செயற்பாடுகளுக்கான பணம் பெறப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.
அதேபோன்று அனாவசியமான இடங்களில் காணப்படும் மதுபானசாலைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது கொள்ளையர்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். கொள்ளையர்களை அடையாளம் காணும் செயற்பாடு கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படுகிறது.
அவ்வாறான பலர் தற்போது வாகனங்களை விட்டுச் சென்றுள்ளனர்.
பலர் வாகனங்களை வீதியில் பயன்படுத்தாமல் மறைத்து வைத்துள்ளமை தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.