இறுதி வருமான வரியைச் செலுத்தல் தொடர்பில் வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், 2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரியைச் செலுத்தல் மற்றும் தவறுகையில் உள்ள வரியைச் செலுத்தி முடித்தல் தொடர்பில் விளக்கமளித்துள்ளது.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி விகிதங்களான, துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.
குறித்த விடயம் இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதமாக பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.