இப்போதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக 250 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 5 கடற்படை சமையல்காரர்களும் உள்ளனர்.
மேலும், இறுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பிற்காக 160 அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ளனர்.
அவசியமற்ற பாதுகாவலர்கள் மற்றும் அரச சம்பளம் பெறும் சேவையாளர்களின் தொகை அளவை வெகுவிரைவில் ஆலோசனை செய்து குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று முன்னதாக சொல்லியிருந்த அநுர இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டி பல சிங்கள சமூக ஊடகங்கள் செய்தி வெளியுட்டள்ளன.
இருப்பினும், இதுகுறித்து ஜனாதிபதி அநுர அவர்களும் மற்றும் பொதுபாதுகாப்பு அமைச்சர் விஜித அவர்களும் உரிய திணைக்களங்கள் மற்றும் சட்டவல்லுனர்களுடனும் ஆலோசித்து வருவதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரச தரப்பு தெரிவிக்கின்றது.