தமிழர் விவகாரத்தில் இந்தியா செயல்பட வேண்டிய விதம் குறித்து தெளிவுபடுத்தி இந்திய
பிரதமருக்கு தாமும் கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்
தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரி வித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் அரசமைப்பின் 13ஆவது திருத்தம் வேண்டாம் அதனை இந்தியா வற்புறுத்தக்கூடாது என்று வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 21ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழர் பிரச்னைக்கான தீர்வை மோடி வலியுறுத்துவார் என்று எதிர்பார்க் கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே தமிழர் இனப்பிரச்னைக்கு சமஷ்டி முறையில் மாத்திரமே தீர்வு காண முடியும். அதன் அடிப்படையிலேயே பேச்சுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.
இந்திய – இலங்கை ஒப்பந்தம் வேறு அரசமைப்புக்கான 13ஆவது திருத்தம் வேறு. இந்தியாவின் நேரடித் தலையீட்டின் மூலம் இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகிறோம் என்ற பெயரில் இலங்கை அரசாங்கத்தால் ஒருதலைப்பட்சமாக தயாரிக்கப்பட்டது 13ஆம் திருத்தச் சட்டம். 13ஆவது திருத்தம் தமிழர்களை பாதிப்பதாலேயே அதனை நிராகரிக்கிறோம். மாறாக இந்தியாவை தாம் ஒருபோதும் பகைக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் வெகுவிரைவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்லவுள்ளார்.
இந்த நிலையில் அதற்கு முன்பாக 13ஆவது திருத்தம் குறித்து தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியும்
தமிழர் விவகாரத்தில் இந்தியா செயல் படவேண்டிய விதம் பற்றிய தமது அபிப்பிராயம் குறித்து விளக்கமளித்தும் கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கவுள்ளோம் – என்றும் கூறினார்.