Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலையில் மக்களின் காணிகள் அபகரிப்பு; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

திருகோணமலையில் மக்களின் காணிகள் அபகரிப்பு; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வெல்வேரி கிராமத்தினை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திங்கட்கிழமை (30) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் வசித்து வந்த 31 குடும்பத்தினர்களது 42 ஏக்கர் குடியிருப்புக் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில் அந்த காணிகளில் 35 ஏக்கர் காணிப்பகுதியானது பெரும்பான்மையினத்தினை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு அரசினால் குத்தகை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாக முறையிடுவதற்காக வருகை தந்திருந்தனர்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக குறித்த கிராமத்தவர்கள் இடம்பெயர்ந்திருந்த நிலையில் அவர்கள் மீளக் குடியேற முட்பட்டபோது அவர்களது காணிப்பகுதிகளை அரசானது கையகப்படுத்தியதோடு, யுத்தம் முடிந்து பல வருடங்கள் ஆகிய நிலையில் குறித்த காணிகளில் இற்றை வரை மீளக்குடியேற முடியாதிருப்பதன் காரணமாக அது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடுவதற்கு வந்திருந்தனர்.

1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின் போது தாம் இடம்பெயர்ந்து மீளக் குடியமர்ந்ததன் பின்னர் 90 களிலும் இடம் பெயர நேரிட்டதாகவும் அதன் பின்னராக அவர்களது வீடுகள் இருந்த பகுதிகளில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்ததால் அப்போது மீளவும் குடியேற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

அதன் பின்னராக வனஜீவராசிகள் திணைக்களம் குறித்த பகுதியில் எல்லையிட்டதன் பின்னராக தற்போது அங்கு செல்ல முடியாத நிலை நெற்பட்டிருந்ததுடன் அவ்வாறு எல்லையிடப்பட்ட பகுதிகள் அரச இயந்திரங்கள் மூலமாக பெரும்பான்மையினத்தினை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்க்கடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் அது தொடர்பில் பலதரப்பட்ட மட்டங்களில் முறையிடப்பட்டிந்த போதிலும் தகுந்த பதில் கிடைக்கப்பெறாத நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட வருகை தந்திருப்பதாகவும் இதன்போது அவர்கள் குறிப்பிட்டனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரரின் வழக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

ஞானசார தேரரின் வழக்கு ஒத்திவைப்பு!

October 7, 2026
ஞானசார தேரருக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல்!
செய்திகள்

ஞானசார தேரருக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல்!

October 7, 2026
சபரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்; 11 மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்!
செய்திகள்

சபரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்; 11 மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்!

October 7, 2026
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 570 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 570 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

October 7, 2026
நோர்ட்டன் பிரிட்ஜில் பேருந்துடன் சைக்கிள் மோதி தரம் 7 மாணவன் உயிரிழப்பு!
செய்திகள்

நோர்ட்டன் பிரிட்ஜில் பேருந்துடன் சைக்கிள் மோதி தரம் 7 மாணவன் உயிரிழப்பு!

October 7, 2026
ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலை!
செய்திகள்

ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலை!

October 7, 2026
Next Post
மொட்டு சின்னத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட தயாராகும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி!

மொட்டு சின்னத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட தயாராகும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.