விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், விளையாட்டுத்துறை அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய, நான்கு பிரதேசங்களில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 05 விளையாட்டு நிலையங்களை முறையான விழாக்கள் இன்றி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்குமாறு விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பிலும் மாத்தளையிலும் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை ஹொக்கி மைதானம், பிங்கிரிய வடமேற்கு விளையாட்டுக்கழகத்தின் நீச்சல் தடாகம், ஓமந்தே வவுனியா மாவட்ட விளையாட்டுக்கழகத்தின் பல்விளையாட்டு உள்ளக அரங்கம், ஓமந்த வவுனியா மாவட்ட விளையாட்டுக்கழகத்தின் நீச்சல் தடாகம் போன்றவற்றை சாதாரணமாக அரசியல்வாதிகளது தலைமையற்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்குமாறு அறிவித்துள்ளார்.