Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மத்திய கிழக்கில் போர்பதற்றம் அதிகரிப்பு; உலக எரிபொருள் விநியோகம் தடைப்படும் சாத்தியம்!

மத்திய கிழக்கில் போர்பதற்றம் அதிகரிப்பு; உலக எரிபொருள் விநியோகம் தடைப்படும் சாத்தியம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கில் மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் உலக எரிபொருள் விநியோகம் தடைப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, பிரண்ட் மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 74.40 டொலராக உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகில் எரிபொருள் உற்பத்தியில் ஈரான் 7வது இடத்தில் உள்ளதுடன் ஒபெக்கில் (OPEC) மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது.

மோதல் மேலும் தீவிரமடைந்தால், ஹோர்முஸ் கடல் வழியாக எரிபொருள் தாங்கிகளின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படக்கூடும் என சந்தை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையிலான இந்த கடல் பாதை உலக எரிபொருள் வர்த்தகத்தில் பெரும் பங்களிப்பை அளிக்கின்ற நிலையில் உலகின் எரிபொருள் விநியோகத்தில் சுமார் 20% இதன் மூலம் கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய ஒபெக் (OPEC) உறுப்பு நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் ஆகியவையும் இந்த கடல் வழியை தங்கள் எரிபொருள் போக்குவரத்துக்காக பயன்படுத்துகின்றன.

இதேவேளை இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜே. கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் இருக்கும் எரிபொருள் கையிருப்பானது எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலும் போதுமானதாகும் எனவும் அடுத்தகட்ட எரிபொருள் கையிருப்புக்கான ஆணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு