Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இதுவரை அரசிடம் ஒப்படைக்கப்படாத சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட கொழும்பு வீடு!

இதுவரை அரசிடம் ஒப்படைக்கப்படாத சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட கொழும்பு வீடு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசாங்கத்தினால் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட கொழும்பு வீடு இன்னும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை என கூறப்படுகின்றது.

கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் உள்ள இல்லம் சம்பந்தன் இறந்து சுமார் மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இல்லம் அமைச்சரவையின் ஒப்புதலுடன் அவரது பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. இந்த வாசஸ்தலத்தை மீண்டும் அரசாங்கம் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சு முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் அண்மையில் கையளித்த போதிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து அந்த தீர்மானம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து புதிய அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இதற்கான பத்திரத்தை கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை 2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தர் பதவியேற்றதன் பின்னர் சம்பந்தனுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லம் கிடைத்தது. அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வந்த போதும் சம்பந்தனுக்கு அந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர வாய்ப்பளித்தார்.

இந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் நீர்க் கட்டணம், மின்சாரக் கட்டணம், தொலைபேசி கட்டணம், பராமரிப்புச் செலவுகள் என்பன அரசாங்கத்தினால் ஏற்கப்படுவதாக கூறப்படுகின்றது.

அத்தோடு இந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களின் சம்பளம் அரசாங்கத்தினால் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை 2017 ஆம் ஆண்டு அந்த வீட்டின் பழுதுபார்க்கும் பணிக்காக மூன்று கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்து இறக்கும் வரை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே வாழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
நெல்லியடி காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள ஆடையகத்துக்கு வன்முறைகும்பல் தீவைப்பு!

நெல்லியடி காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள ஆடையகத்துக்கு வன்முறைகும்பல் தீவைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு