Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரத போராட்டம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரத போராட்டம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இராமேஸ்வரம் – தங்கச்சிமடத்தில் மீனவர்கள் மற்றும் சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் இன்று வியாழக்கிழமை (3) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்டுத் தருமாறு கோரி மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (28) ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 17 இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்த 17 மீனவர்கள் உட்பட முன்னதாக சிறைபிடிக்கப்பட்ட சுமார் 150க்கும் மேற்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இலங்கை கடற்படை வசமுள்ள நாகை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி முதலான மாவட்டங்களைச் சேர்ந்த 175க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இன்று காலை முதல் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் விசைப்படகு மீனவர்கள் மற்றும் சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளமை மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே, இலங்கை சிறையில் உள்ள தங்கள் உறவினர்களை விரைந்து மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க மீனவர்களின் உறவினர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று மூன்றாவது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
Next Post
50க்கும் மேற்பட்ட எலிகளால் கடித்து குதறப்பட்ட குழந்தை; தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை!

50க்கும் மேற்பட்ட எலிகளால் கடித்து குதறப்பட்ட குழந்தை; தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு