எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் நாட்டிற்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி செய்யக் கூடிய சூழல் இருக்கும் என தாம் நம்புவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இறக்குதிக்கான பணத்தை மத்திய வங்கி ஏற்கனவே ஒதுக்கியுள்ளதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனைத்து வகையான வாகனங்களும் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதத்தின் முதலாம் திகதியிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று கடந்த அரசாங்க காலத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன்படி, கார்கள், வான்கள், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள், பிக்கப்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இறக்குமதி தடை நீக்கப்பட்ட பின்னர், உரிமம் பெற்றவர்கள் தங்கள் உரிமத்தின்படி வாகனங்களை இறக்குமதி செய்யலாம் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்கத்கது.