Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குறுமண்வெளி-மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை-குருக்கள் மடம் பகுதிகளுக்கிடையிலான புதிய இயந்திர பாதை சேவை ஆரம்பம்

குறுமண்வெளி-மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை-குருக்கள் மடம் பகுதிகளுக்கிடையிலான புதிய இயந்திர பாதை சேவை ஆரம்பம்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் மிகப்பெரும் நீர்வழிப்போக்குவரத்துப்பாதைகளில் ஒன்றாக கருதப்படும் குறுமண்வெளி-மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை-குருக்கள்மடம் பகுதிக்கான புதிய இயந்திர பாதை சேவைகள் இன்று (04) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டன.

நீண்டகாலமாக மிக மோசமான நிலையிலிருந்த பாதையானது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் வேண்டுகோளின் அடிப்படையில் புதிய பாதை சேவையாக இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுனர் ஜயந்தலால் ரட்ன சேகரவினால் இந்த சேவை இன்று காலை இரண்டு போக்குவரத்து துறைகளிலும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதற்காக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் ஊடாக 80 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு, இரண்டு இயந்திரப்பாதைகளும் கொள்வனவு செய்யப்பட்டு போக்குவரத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் கருணைநாதன் உட்பட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினையும் போரதீவுப்பற்று மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரவுகளையும் இணைக்கும் மிக முக்கியமான நீர்வழி போக்குவரத்துச்சேவையாக குறுமண்வெளி-மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை-குருக்கள்மடம் போக்குவரத்து பாதைகள் காணப்படுகின்றன.

இதன் ஊடாக தினமும் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களும்,பாடசாலை மாணவர்களும்,ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களும் பயணம் செய்யும் நிலை காணப்படுகின்றது.

எனினும் கடந்த காலத்தில் சேவையில் ஈடுபட்டு வந்த இயந்திரப்பாதையானது மிகமோசமான வகையில் சேதமடைந்திருந்ததன் காரணமாக மக்கள் ஆபத்தான பயணத்தையே முன்னெத்துவரும் நிலையிருந்தது.

இது தொடர்பில் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு முயற்சிகளையும் முன்னெடுத்திருந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் இதற்கான புதிய இயந்திர பாதைகள் வழங்கப்பட்டு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இயந்திரப்பாதை சேவையில் செல்லாவிட்டால் போரதீவுப்பற்று மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரவுகளுக்கு செல்வோர் சுமார் 20கிலோமீற்றர் தூரத்தினை கடக்கவேண்டிய நிலையில், பாதை சேவையூடாக சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்குள் தமக்கான பகுதியை அடையமுடியும் என மக்கள் தெரிவித்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி பிணையில் செல்ல அனுமதி

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி பிணையில் செல்ல அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு