சிறுவர் துஷ்பிரயோகம், போதைப் பொருளற்ற எதிர்கால சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நேரில் சந்தித்து மகஜர் ஒன்றினை கையளிப்பதற்காக காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்தில் தரம் 9 கல்வி கற்கும் பாத்திமா நதா எனும் மாணவி துவிச்சக்கர வண்டியில் தனது சாதனை பயணத்தை முன்னெடுத்துள்ளார்.
இன்று (07.10.2024) திங்கட்கிழமை காலை 7.00 மணிக்கு காத்தான்குடியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ள பாத்திமா நதா தினமும் 50 வரையான கிலோமீற்றர்கள் தூரம் வரை பயணித்து சுமார் ஏழுநாட்களுக்குள் கொழும்பு சென்று தனது சாதனைப் பயணத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அதனையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமையன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நேரில் சென்று சந்தித்து பயணத்தின் நோக்கம் தொடர்பான மகஜர் ஒன்றினை கையளிக்கவுள்ளதாக மேலும் இச் சகோதரி குறிப்பிட்டனர்.