பிரான்ஸில் கடந்த செவ்வாக்கிழமை Nahel எனும் இளைஞன் காவல்துறையினரால் கொல்லப்பட்டதை அடுத்து கடந்த ஒரு வாரமாக இடம்பெற்ற வன்முறையினால் இதுவரை 243 பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Nahel எனும் இளைஞன் காவல்துறையினரால் கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையில், பேருந்துகள், ட்ராம் தொடருந்துகள் எரிக்கப்படுவதுடன், நகரசபைக் கட்டிடம் மற்றும் கல்வி நிலையங்கள், பாடசாலைகள், ஆரம்ப பாடசாலைகளும் கலகக்காரர்களால் எரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏழு நாட்களில் இதுவரை 243 நிலையங்கள் அவ்வாறு எரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 60 பாடசாலைகள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் Pap Ndiaye இன்று செவ்வாய்க்கிழமை காலை தெரிவித்தார்.
அதோடு பாடசாலைகளை தாக்குவது, எங்களுடைய வாழ்வின் அடையாளங்களை தாக்குவது போன்றது எனவும் பிரான்ஸ் கல்வி அமைச்சர் கவலை வெளியிட்டார்.