Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
களுவாஞ்சிக்குடியில் நடத்துனரை தாக்கியவர்களுக்கு 14 நாள் விளக்கமறியல்!

களுவாஞ்சிக்குடியில் நடத்துனரை தாக்கியவர்களுக்கு 14 நாள் விளக்கமறியல்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தனியார் பஸ்வண்டி நடத்துனர் ஒருவரை தென்னைமரத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பஸ்வண்டி உரிமையாளர், சாரதி ஆகிய இருவரையும் எதிர்வரும் 22ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை (08) உத்தரவிட்டார்.

அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது நடத்துனரான இளைஞன் கல்முனையைச் சேர்ந்த தனியார் பஸ்வண்டி உரிமையாளர் ஒருவரின் கல்முனை கதுருவெல பிரதேசத்துக்கான பிரயாணிகள் சேவை பஸ்வண்டியில் நடத்துனராக கடமையாற்றி வந்துள்ளார்.

இதன்போது களுவாஞ்சிக்குடி மகிளுரைச் சேர்ந்த பஸ்வண்டி உரிமையாளரது பஸ்வண்டி கல்முனை மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் நிலையில், இரு பஸ்வண்டிகளின் நேர அட்டவணையில் நிமிட கணக்கான வித்தியாசத்தினால் பிரயாணிகளை ஏற்றுவதில் அடிக்கடி முரண்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் 5ம் திகதி சனிக்கிழமை கல்முனை மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பஸ்வண்டி நடத்துனர் சாரதியுடன் குறித்த தாக்குதலுக்கு உள்ளான நடத்துனர் பஸ்வண்டியில் ஒன்றாக இருந்து மதுபானம் அருந்தியுள்ளனர்.

இதன்போது நடத்துனருக்கு மதுபோதை அதிகரித்த நிலையில் அவரது கையடக்க தொலைபேசி காணாமல் போயுள்ளது. அதனை தேடியபோது அது கிடைக்காத நிலையில் வீட்டிற்கு சென்று உறங்கியுள்ளார்.

இதனையடுத்து 6ம் திகதி காலையில் காணாமல் போன கையடக்க தொலைபேசி தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவதினமான 7ம் திகதி காணாமல்போன கையடக்க தொலைபேசியைத் தேடி மீண்டும் களுவாஞ்சிக்குடிக்கு சென்று குறித்த பஸ்வண்டியில் தேடிய நிலையில் அவரை பஸ்வண்டி உரிமையாளர் மற்றும் சாரதி நடத்துனரை பிடித்து கையைக்கட்டி பஸ்வண்டியில் திருடியதாக கூறி பாழடைந்த காணிக்குள் இழுத்துச் சென்று தென்னைமரத்தில் கட்டிவைத்து தன்னை தாக்கியதாக பாதிக்கப்பட்ட நடத்துனர் அவர் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை பொதுமக்கள் கண்டதையடுத்து கட்டிவைத்த நடத்துனரிடம் நீ பொலிஸில் தெரிவித்தால் உன்னை கைது செய்து 14 நாட்கள் களிதின்பதற்கு சிறையில் அடைப்போம் என அச்சுறுத்தியதாகவும், அதன் பின் அங்கிருந்து முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றிக் கொண்டு கல்லாறு பாலத்திற்கு அருகில் தன்னை இறக்கிவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட நடத்துனர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் இறக்கிவிட்டதையடுத்து குறித்த நடத்துனர் கல்முனை அஸ்ரப் நாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
Next Post
நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம்!

நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு