Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முல்லைத்தீவில் மாற்றுத்திறனாளி ஒருவரின் பல்பொருள் அங்காடி தீக்கிரை!

முல்லைத்தீவில் மாற்றுத்திறனாளி ஒருவரின் பல்பொருள் அங்காடி தீக்கிரை!

2 years ago
in செய்திகள்

முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை பகுதியில் மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளி ஒருவரின் பல்பொருள் வாணிபம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம்(08) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு, சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள குறித்த பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன் இருந்த களஞ்சியசாலை ஒன்றும் தீயில் எரிந்துகொண்டிருந்த நிலையில் குறித்த வீதி வழியாக கொழும்பிலிருந்து முல்லைத்தீவு வந்த அரச பேருந்து சாரதி, நடத்துனர் இதனை அவதானித்து கடை உரிமையாளரின் வீட்டில் தெரிவித்து ஆயலவர்களின் உதவியுடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இருப்பினும் கடையில் உள்ள சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் முற்று முழுதாக தீக்கிரையாகியுள்ளது.

இது திட்டமிட்ட செயற்பாடா அல்லது மின்னினால் ஏற்பட்ட தீயா என தெரியவில்லை என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இது திட்டமிட்ட செயற்பாடா அல்லது மின்னினால் ஏற்பட்ட தீயா என பல கோணங்களில் முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் மின்சார சபையினர், கிளிநொச்சி தடயவியல் காவல்துறையினர் முல்லைத்தீவு காவல்துறையினர் இணைந்து மேலதிக சோதனை நடவடிக்கைகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவு இல்லாத நிலையில் இவ்வாறு பல கடைகள் முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ள நிலையில் தீயணைப்பு பிரிவு ஒன்றை உருவாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடை உரிமையாளர் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, தனது ஒரு காலை இழந்த நிலையில் மூன்று பெண்பிள்ளைகளை கொண்ட குடும்பத்தின் தலைவரான சிவராசா சிறீவரதன் என்ற முன்னாள் போராளியின் சிலாவத்தை சந்தியில் இருந்த யதி கடையே இவ்வாறு தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை
உலக செய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை

July 30, 2026
தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது
செய்திகள்

தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது

July 30, 2026
சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!
செய்திகள்

சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!

July 30, 2026
வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
Next Post
ஞானசார தேரருக்கு பிடியாணை!

ஞானசார தேரருக்கு பிடியாணை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு