பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன இடைத்தங்கல் பகுதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
காலி மற்றும் கொழும்பு மாவட்டங்களில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களும் வெலிப்பென்ன பகுதியில் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன இடைத்தங்கல் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்துகம – அளுத்கம வீதியில் 1 1/2 அடி நீர்மட்டம் பதிவாகியுள்ளது.
மேலும், கொழும்பு – அவிசாவளை நெடுஞ்சாலை வீதியில் எஸ்வத்த சந்தியிலிருந்து ஹிங்குரால சந்தி வரை வீதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.