அரச வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆகியவற்றை தவறாக பயன்படுத்தப்பட்டால் அல்லது திருடப்பட்டால், அது தொடர்பில் புகார் அளிக்க புதிய அவசர இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
துல்லியமான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு பண ஊக்கத்தொகை வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முன்முயற்சி, பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதையும் அரச சொத்துக்களை சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.