Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

2 years ago
in செய்திகள்

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாவை அடுத்த வாரம் முதல் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபா ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி, அதே தொகையை அடுத்த வாரத்திற்குள் ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நிதியமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு 24/08/2024 திகதியிட்ட அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 02/2024 வெளியிடப்பட்ட போதிலும், அதற்கான நிதி எதுவும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை.

இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இதற்கான நிதியை வழங்குமாறு நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

2024 ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் இடைக்கால கொடுப்பனவான ரூ.3000 கிடைக்காததால் ஓய்வூதியம் பெறுவோர் எதிர்கொள்ளும் சிரமங்களையும் அவர்களின் கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, அரசின் நிதி நெருக்கடிக்குகு மத்தியிலும் இம்மாதம் முதல் இந்த தொகையை வழங்க இதன்போது ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.

ஒக்டோபர் மாதத்துக்கான ஓய்வூதியம் ஏற்கனவே ஓய்வூதியர்களின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதால், ஒக்டோபர் மாதத்துக்கான ரூ.3000 கொடுப்பனவை அடுத்த வாரத்திற்குள் அவர்களது கணக்கில் வைப்பிலிடுமாறும் 3000 ரூபா கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் ஓய்வூதியத்துடன் சேர்த்து வழங்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்
செய்திகள்

மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

July 23, 2026
கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு
உலக செய்திகள்

கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு

July 23, 2026
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

July 23, 2026
மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
Next Post
சுகாதார அமைச்சில் முழுமையான மாற்றம் வேண்டும்; ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!

சுகாதார அமைச்சில் முழுமையான மாற்றம் வேண்டும்; ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு